October 2021 – Dinaseithigal

கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் நாள் அக்டோபர் 31

475 – ரோமுலசு ஆகுஸ்டலசு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 683 – மெக்கா முற்றுகையின் போது கஃபா தீப்பற்றி அழிந்தது. 802 – பைசாந்தியப் பேரரசி ஐரீன் பதவியில் இருந்தௌ அகற்றப்பட்டார். பதிலாக நிதி அமைச்சர் நிக்கபோரசு பேரரசராக நியமிக்கப்பட்டார். 1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார். 1803 – கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப்  படைகள் பண்டாரவன்னியனின்  படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர். 1863 – நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் “வைக்காட்டொ” என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது.

Read More

ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்… தீர்வும்…

1. குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்காதது. 2. ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தர தவறியது. 3. குழந்தையை சரியாக பராமரிக்காதது. 4. நுண்ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகளால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை. 5. கருவுற்றபோது தாய் ஊட்டச்சத்தான உணவை உண்ணாமல் இருந்தது. 6. தாய் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டது அல்லது தாய் குறைந்த எடையுடன் இருப்பது. இதனால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும். 7. சுகாதாரமற்ற தண்ணீரைப் பருகுதல், சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், தேவையானபோது கைகளை சோப் பயன்படுத்தியோ அல்லது நன்றாக கை கழுவாமலோ இருத்தல். 8. …

Read More

அதிக அளவு தண்ணீர் பருகுவதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்

1.சிறுநீரின் நிறம்: சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது மோசமான அறிகுறியாகும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருகிவர வேண்டும். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவதே சரியானது. அது உடலில் நீர்ச்சத்து உகந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டும். ஆனால் சிறுநீர் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதிக நீரிழப்பு ஏற்படுவதாக அர்த்தம். அதாவது தண்ணீர் உட்கொள்ளும் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். 2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்: தண்ணீர் குடிக்கும் அளவு …

Read More

தொடந்து அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலை

மூன்று ஆண்டுக்குள் (2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை) 24 ஆயிரம் குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். தேர்வுகளில் தோல்வி, திருமண அழுத்தம், வறுமை, வேலையின்மை, உடல் உபாதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம், சமூகத்தில் நற்பெயர் வீழ்ச்சி, தேவையற்ற கர்ப்பம் போன்ற காரணங்கள் தற்கொலைக்கான பின்னணியில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2017-ல் 8,029 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அது …

Read More

கண் தானம் செய்வதன் அவசியம்

இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது. நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவிக் குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்த சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள். தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், …

Read More

பளபளப்பான சருமத்திற்கு பன்னீர்

கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு பன்னீர் அருமருந்து. சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சனைகள் நீங்க, பன்னீருடன் காற்றாழை ஜெல்லை கலந்து சருமத்தில் தேய்ந்து 20 நிமிடம் கழித்து நீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும். உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க, பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்க. இவ்வாறு செய்தால் உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து அழகுக்கு அழகு சேர்க்கும். பன்னீருடன் வெந்தய …

Read More

கொரோனா வைரசிடம் சிக்காமல் நலமோடு வாழ 4 வழிமுறைகள்

கொரோனா 2-வது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், 3-வது அலையும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை அலைகள் வந்தாலும் கொரோனாவிடம் சிக்காமல் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கு மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 வழிமுறைகளை சுகாதாரத்துறையினரும், டாக்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகிய 4 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால் கொரோனாவுக்கு முடிவு கட்ட முடியும் என்பது மருத்துவக்குழுவினரின் அறிவுரை.இந்த 4 …

Read More

கழுத்தின் அழகிற்கு செய்ய வேண்டியவை…

* தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும கீழுமாக 5 முறை அசைக்க வேண்டும். *நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறமாக திருப்பி சில நொடிகள் அப்படியே இருந்து பின்னர் மீண்டும் நேராக பார்க்க வேண்டும். இதே போல் இடது புறமும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம். * கைகளை தாடை மேல் வைத்து கழுத்தை பின்னால் சாய்த்து சில நொடிகள் கழித்து கழுத்தை நேரக்க வேண்டும். இதனால் நரம்புகள் மற்றும் சருமத்தில் உள்ள இறுக்கம் அகலும். …

Read More

குழந்தைகளுக்கு சீரான உணவுப்பழக்கம்

குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரையை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதை …

Read More

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

கோடை காலத்தில் வெப்ப தாக்கத்தை சமாளிப்பதற்கு வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் பருக வேண்டியிருக்கும். மழைக்காலம் தொடங்கியதும் பருகும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கும். உடலில் நீர்ச்சத்து அளவை சீராக பராமரிக்க எல்லா பருவ காலநிலையிலும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது. தினமும் ஆண்கள் 4 லிட்டர் திரவ உணவுகளையும், பெண்கள் 3 லிட்டர் திரவ உணவு களையும் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மது, உடலுக்கு எனர்ஜி தரும் குளிர்பானங்கள், கார்பைன் கலந்த பானங்கள் உடல் வறட்சியை உண்டாக்கும் …

Read More