தைவனை கடுமையாக எச்சரிக்கும் சீனா… காரணம் என்ன? – Dinaseithigal

தைவனை கடுமையாக எச்சரிக்கும் சீனா… காரணம் என்ன?

கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனாலும் சீனா தைவான தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவதற்கு சீனா கடந்த வாரம் விண்ணப்பித்த நிலையில், அந்த ஒப்பந்தத்தில் இணைய தைவான் நேற்று முன்தினம் தனது விண்ணப்பத்தை சமர்பித்தது.

தற்போது இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, “தைவானுடன் எந்த நாடும் அதிகாரபூர்வமாகப் பரிமாறிக் கொள்வதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் மற்றும் தைவான் பிராந்தியத்தை எந்தவொரு அதிகாரபூர்வ ஒப்பந்தங்கள் அல்லது அமைப்புகளுடன் இணைப்பதை உறுதியாக எதிர்க்கிறோம்” என கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தில் தைவானுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக சீனா அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட 2 விமானங்கள் உள்பட மொத்தம் 24 விமானங்கள் தங்களின் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *