துவண்டு கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ் – Dinaseithigal

துவண்டு கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ்

பாகிஸ்தான் தொடரை குறித்து ஜானி கிரேவ் கூறுகையில் ‘‘கிரிக்கெட் தொடர் குறித்த எங்களுடைய கடமைகளுக்கு மதிப்பு அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கும் தொடரையும் சேர்த்துதான். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிர்வாகக்குழு கிரிக்கெட் தொடருக்கான கடமையை நிறைவேற்றாமல் இருப்பது என்பது எங்களுடைய நோக்கமில்லை. எங்களுடைய சுற்றுப்பயண கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். 2018-ம் ஆண்டு நாங்கள் செய்ததை போன்று தனி பாதுகாப்பு நிபுணர்களுடன் செல்வோம்.’’ என்றார். இதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன் கிறிஸ் கெய்ல் பாகிஸ்தானுக்கு செல்ல இருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *