அரையிறுதிக்கு முன்னேறிய சானியா-ஷுவாய் ஜோடி – Dinaseithigal

அரையிறுதிக்கு முன்னேறிய சானியா-ஷுவாய் ஜோடி

ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ்  போட்டிகள் செக் குடியரசு நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி   ஆட்டத்தில்  இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி  களமிறங்கினர்.
சானியா-ஷுவாய் ஜோடி கஜகஸ்தானின் அன்னா டானிலினா மற்றும் பெலாரஸின் லிட்சியா மரோசாவா ஜோடியை  6-3, 3-6, 10-6 என்ற கணக்கில்  வீழ்த்தினர் . இதன் மூலம் நாளை நடைபெறும் அரையிறுதி  ஆட்டத்துக்கு சானியா, ஷுவாய் ஜோடி தகுதி பெற்றனர். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில்  சானியா-ஷுவாய் ஜோடி ஜப்பானின் ஹோசுமி -நினோமியா ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *