மனைவி மற்றும் மகளை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் – Dinaseithigal

மனைவி மற்றும் மகளை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர்

கலபுரகி அருகே மனைவி மற்றும் மகளை கல்லால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கலபுரகி மாவட்டம் சேடம் டவுன் ஈஸ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் திகம்பர் (வயது 46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெகதீஷ்வரி (44). இந்த தம்பதிக்கு பிரியங்கா (11) என்ற மகள் இருந்தாள். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல், நேற்று முன்தினம் இரவும் திகம்பருக்கும், ஜெகதீஷ்வரிக்கும் இடையே சண்டை உண்டானது. பின்னர் தனது மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு ஜெகதீஷ்வரி படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில், நள்ளிரவில் எழுந்த திகம்பர் வீட்டின் அருகே கிடந்த கல்லை எடுத்து வந்து மனைவி ஜெகதீஷ்வரி, மகள் பிரியங்காவின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்களின் தலைகளில் அவர் கல்லை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் தலை நசுங்கி தாய், மகள் பரிதாபமாக இறந்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *