புத்தூரில், குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக வியாபாரியிடம் ரூ.7.24 லட்சம் மோசடி – Dinaseithigal

புத்தூரில், குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக வியாபாரியிடம் ரூ.7.24 லட்சம் மோசடி

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா ராமகுஞ்சா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). வியாபாரியான இவர், மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது  கடந்த ஜனவரி மாதம் எனது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து குறைந்த வட்டியில் கடன் வேண்டுமானால் உங்களது முகவரியை தெரிவிக்கும்படியும், முன்பணமாக ரூ.5.21 லட்சத்தை கீழ்கண்ட வங்கிக்கணக்கு செலுத்தும்படி கூறப்பட்டு இருந்தது. அதை நம்பி நானும் எனது விவரங்களை தெரிவித்து ரூ.5.21 லட்சத்தை அதில் குறிப்பிடப்பட்ட வங்கிகணக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வட்டிக்கு கடன் கொடுக்கவில்லை.  இதேபோல் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக மற்றொரு நிதி நிறுவனத்தில் இருந்து வந்த தகவலை நம்பி அந்த நிறுவனத்துக்கும் ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் செலுத்தினேன். ஆனால் அங்கும் நீண்ட நாட்கள் ஆகியும் வட்டிக்கு கடன் வழங்கவில்லை. அப்போது தான் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவதாக தன்னிடம், மர்மநபர்கள் ரூ.7.24 லட்சம் மோசடி செய்ததை உணர்ந்தேன்.  ஆகையால் என்னிடம் பண மோசடி செய்த மர்மநபர்களை கண்டுபிடித்து, இழந்த பணத்தை திரும்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *