இனிவரும் 5ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம் – ராகுல் நம்பிக்கை – Dinaseithigal

இனிவரும் 5ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம் – ராகுல் நம்பிக்கை

துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி185 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்னர் 186 ரன்கள் வெற்றி இலக்குடள் களமிறங்கிய பஞ்சாப் அணி 183 ரன் எடுத்து 2 ரன்னில் தோல்வியடைந்தது.

கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் பஞ்சாப் அண 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த்து. எளிதில் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை கோட்டை விட்டது  குறித்து பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில்,

முந்தைய தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிவரும் 5ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். சிறப்பாக ஆடியும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *