பஞ்சாப்பை கடைசி ஓவரில் மடக்கிய கார்த்திக் தியாகி – Dinaseithigal

பஞ்சாப்பை கடைசி ஓவரில் மடக்கிய கார்த்திக் தியாகி

துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி185 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்னர் 186 ரன்கள் வெற்றி இலக்குடள் களமிறங்கிய பஞ்சாப் அணி 183 ரன் எடுத்து 2 ரன்னில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற வேண்டியது. கடைசி 2 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய முஸ்தாபிசூர் ரகுமான் 4 ரன்னை கொடுத்தார். கடைசி  ஓவரில் 4 ரன் தேவைப்பட்ட என்ற நிலையில், கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. 2-வது பந்தில் ஒரு ரன் கொடுத்தார். 3-வது பந்தில் நிக்கோலஸ் பூரனை அவுட் செய்தார். 4-வது பந்தில் தீபக் ஹூடா ரன் எடுக்கவில்லை.

5-வது பந்தில் ஹூடா ஆட்டம் இழந்தார். இதனால் கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. கார்த்திக் தியாகியின் அபாரமான பந்து வீச்சால் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *