அருமையான பூண்டு பொடி – Dinaseithigal

அருமையான பூண்டு பொடி

தேவையான பொருட்கள்

பூண்டு – 15 பல்
காய்ந்த மிளகாய் – 10 -15
காய்ந்த மல்லி – ஒரு கப்
பெருங்காயம் – சிறிது
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், காய்ந்த மல்லி மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்து ஆறவிடவும். வாணலியின் சூட்டிலேயே புளி மற்றும் பூண்டைப் போட்டு வதக்கவும்.
ஆறியதும் காய்ந்த மிளகாய், பெருங்காயம், புளி மற்றும் உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அத்துடன் பூண்டைச் சேர்த்து அரைக்கவும். கடைசியாக காய்ந்த மல்லியைச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.
பொடியில் ஈரத்தன்மை இருப்பது போலத் தெரிந்தால், வெறும் வாணலியை சூடுபடுத்தி அரைத்தப் பொடியைப் போட்டு கிளறி, ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். (அதிக நேரம் வரை அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டாம். வாணலி சூடானதும் அடுப்பை அணைத்துவிட்டு, பிறகு பொடியைக் கொட்டி கிளறவும்). இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான பூண்டு பொடி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *