சுக்கான் கீரை பயன்கள் – Dinaseithigal

சுக்கான் கீரை பயன்கள்

சுக்கான் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குடல்புண் குணமாகும். மலச்சிக்கல் சரியாகும். வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து சுக்கான். ரத்த அழுத்தத்தை சரிசெய்யும். இதயத்தைப் பலப்படுத்தும். வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து இதில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.

சுக்கான் கீரையைத் தண்ணீர் விட்டு அலசி, வறுத்த உளுந்தம் பருப்புடன் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு,  தேங்காய் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி சட்னியாக அரைத்து, காலை உணவில் சேர்த்துச் சாப்பிடலாம். சுக்கான் கீரையை அலசி, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும்.  மஞ்சள் காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *