சர்வதேச கிரிக்கெட் : 20 ஆயிரம் ரன்களை கடந்த மிதாலி ராஜ் – Dinaseithigal

சர்வதேச கிரிக்கெட் : 20 ஆயிரம் ரன்களை கடந்த மிதாலி ராஜ்

புதுடெல்லி:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்து 63 ரன்கள் எடுத்த அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார்.

38 வயதான மிதாலிராஜ் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அரை சதம் விளாசி சாதித்து உள்ளார். அவர் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,367 ரன்கள் எடுத்து உள்ளார். இதில் 7 சதமும், 59 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 125 ரன் குவித்து உள்ளார். நேற்றைய போட்டியின் மூலம் அவர் 59-வது அரை சதத்தை தொட்டார். 1999-ம் ஆண்டு அவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெறப்போவதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *