ப்ரெட் பீட்ஸா செய்வது எப்படி? – Dinaseithigal

ப்ரெட் பீட்ஸா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ப்ரெட் – 4 ஸ்லைஸ்
குடைமிளகாய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
கேரட் – ஒன்று
பீட்ஸா சாஸ் (அ) டொமேட்டோ கெட்சப் – தேவையான அளவு
வெண்ணெய் – தேவையான அளவு
சீஸ் – தேவையான அளவு

செய்முறை

பேனில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு பிரட்டி எடுக்கவும். ப்ரெட் ஸ்லைஸில் சாஸை தடவவும். பின்னர் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும். அதன் மேல் சிகப்பு மற்றும் பச்சை குடைமிளகாயை பொடியாக நறுக்கி தூவவும்.

நாண்ஸ்டிக் பேனில் ப்ரெட்டை வைத்து அதன் மேல் சீஸ் தூவவும். அடுப்பின் தணலை மிதமாக வைத்து மூடி சீஸ் உருகும் வரை வைத்திருந்து எடுக்கவும். சுலபமாக செய்யக்கூடிய ப்ரெட் பிட்ஸா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *