ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் – Dinaseithigal

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்

அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடத்தப்பட்டது. இதில் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 90 விவசாயிகள் பங்கேற்றனர். ஏலத்தில் மொத்தம் 980 மூட்டையில் 45 மெட்ரிக் டன் நிலக்கடலை வந்தது. குவிண்டால் முதல் தரம் ரூ.6,900 முதல் ரூ.6,980க்கும், இரண்டாம் தரம் ரூ.6,300 முதல் ரூ.6,550க்கும், மூன்றாம் தரம் ரூ.5,800 முதல் ரூ.5,940 வரை விற்கப்பட்டது. இதில் 16 வியாபாரிகள் பங்கேற்றனர். ரூ.18 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. நிலக்கடலை வரத்து அதிகரிப்பால் அங்கிருந்த 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் நிரம்ப தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *