பலாக்கொட்டை வடை செய்வது எப்படி? – Dinaseithigal

பலாக்கொட்டை வடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பலாக்கொட்டை – 25
அரிசி மாவு – 2 கப்
வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
இஞ்சி – 1 அங்குலம் ( பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கொத்தமல்லியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

பலாக்கொட்கைளை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்பு அவற்றை ஆறவைத்து மேலே இருக்கும் தோலை நீக்கி விட வேண்டும். பின்னர் பலாக்கொட்கைளை மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும் .

இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி தழை, மிளகாய்த்தூள், ஓமம், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த கலவையில் அரிசி மாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.

அந்த மாவை சிறிது நேரம் மூடி வைத்து வடை போல தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

சூப்பரான பலாக்கொட்டை வடை தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *