கருப்பூர் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு – Dinaseithigal

கருப்பூர் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு

சேலம்:

சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 22). இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் கருப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசாரும் அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் விஜய்குமார் இன்று காலை பிணமாக மிதந்தார். இதை பார்த்த் அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *