தாராபுரம் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் கைது – Dinaseithigal

தாராபுரம் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் கைது

திருப்பூர்;

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமிக்கு ‘இன்ஸ்டாகிராம்‘ மூலமாக திருச்சியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (21) என்பவர் பழக்கமானார். இதையடுத்து சூர்யபிரகாஷ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். மேலும் வேலை நிமித்தமாக சூர்யபிரகாஷ் திருப்பூர் வந்தபோது சிறுமியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் விசாரித்ததில் சூர்யபிரகாஷ் சிறுமியை வெளியூர் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் சூர்யபிரகாசை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *