வெள்ளகோவில் அருகே போலி முத்திரை வழக்கில் வக்கீல் கைது – Dinaseithigal

வெள்ளகோவில் அருகே போலி முத்திரை வழக்கில் வக்கீல் கைது

தாராபுரம்;

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வக்கீலாக பணிபுரிந்து வந்தார். அப்போது தாராபுரம், காங்கேயம் ,வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் நடக்கும் பல்வேறு வகையான வழக்குகளை கையில் எடுத்து அவர்களுக்கு நிவாரணம் பெற்று கொடுத்துள்ளார். அதன் விளைவாக அவருக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை சுமார் 31 வழக்குகளில் 75 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக வழக்கறிஞர் ராஜேந்திரன் மீது தாராபுரம் நடுவர்மன்ற சார்பு நீதிபதி தர்மபிரபு தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *