கோபிசெட்டிபாளையத்தில் கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் ‘சஸ்பெண்டு’ – Dinaseithigal

கோபிசெட்டிபாளையத்தில் கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் ‘சஸ்பெண்டு’

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையில் மதுபானங்களை விற்பனையாளர் அர்ச்சுணன் (43) என்பவர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததுடன் இது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரியவந்ததும் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் அர்ச்சுணனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *