ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் புதிய தூதரை அறிவித்த தலிபான்கள் – Dinaseithigal

ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் புதிய தூதரை அறிவித்த தலிபான்கள்

காபூல்:

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் சர்வதேச அங்கீகாரத்தை பெற தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று தலிபான்கள் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஐ.நா. சபையில் உலக தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் சார்பில் தாங்கள் பங்கேற்று பேச அனுமதி அளிக்கும்படி தலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் ஐ.நா. சபைக்கான ஆப்கானிஸ்தானின் புதிய தூதராக முகமது சுஹைல் ஷாகீனை நியமித்து உள்ளனர். இது தொடர்பாக தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெசுக்கு எழுதிய கடிதத்தில் ஆப்கானிஸ்தான் தூதர் நியமனம் பற்றியும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் படுத்த தூதரை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *