ஆஸ்திரேலியாவில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு – Dinaseithigal

ஆஸ்திரேலியாவில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்ஸ்பீல்டு பகுதியில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பெரிய சேதங்கள் ஏற்பட்டதற்கான தகவல் எதுவும் இல்லை என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *