கனடா தேர்தலில் வெற்றி – ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து – Dinaseithigal

கனடா தேர்தலில் வெற்றி – ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி:

கனடா பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய மற்றும் பலதரப்பு பிரச்சினைகளில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன், என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *