ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை – Dinaseithigal

ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை

காபூல்:

ஆப்கானிஸ்தானில் புதிய அரசின் மந்திரி சபையை கடந்த 8-ந்தேதி தலிபான்கள் அறிவித்தனர். தலிபான்களின் இந்த மந்திரி சபையில் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையை போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மந்திரிசபையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்வதேச அளவில் கண்டனத்துக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் புதிய அரசின் இணை மந்திரிகள் பட்டியலை தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் நேற்று வெளியிட்டார். இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் வரும் காலங்களில் பெண்களுக்கும் மந்திரி சபையில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *