பரபரப்பான பகுதியில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் காயம் – Dinaseithigal

பரபரப்பான பகுதியில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் காயம்

இலங்கையில் வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி ராணுவ முகாம் முன்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் வவுனியா நகரிலிருந்து ஏ9 சாலை வழியாக பயணித்த ராணுவ பேரூந்து ஒன்று கொக்குவெளி ராணுவ முகாமிற்கு திரும்ப முயன்ற வேளையில் எதிர்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மூன்று சக்கர வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டுனர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா போக்குவரத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *