பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – இங்கிலாந்து அமைச்சர் தகவல் – Dinaseithigal

பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – இங்கிலாந்து அமைச்சர் தகவல்

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து நாட்டின் சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் கூறுகையில், “12 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்துவதற்கான தலைமை மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். கொரோனா பரவுவதில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள்.

பள்ளிகளில் கொரோனா பரவல் குறையும், இதனால் வகுப்பறையில் மாணவர்கள் இருப்பார்கள்” என குறிப்பிட்டார். இதன்படி குழந்தைகளுக்கு பைசர்/பயோ என்டெக் தடுப்பூசி போடப்படும். ஆனால் இப்படி தடுப்பூசி போடுவதற்கு குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் சம்மதத்தை தடுப்பூசி செலுத்தும் ஊழியர்கள் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *