இரத்த அழுத்தத்தை சீராக்கும் முள்ளங்கி – Dinaseithigal

இரத்த அழுத்தத்தை சீராக்கும் முள்ளங்கி

முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ-கெமிக்கல்கள் மற்றும் ஆந்தோசையனின்கள் உள்ளது. அதுமிட்டுமின்றி, அதில் உள்ள வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்பட்டு, ப்ரீ-ராடிக்கல்கள் டி.என்.ஏ-வை பாதித்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

முள்ளங்கியில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொருள் உள்ளது. முக்கியமாக இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், முள்ளங்கியை உட்கொண்டு வந்தால், உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சமநிலைப்படுத்தப்பட்டு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள முள்ளங்கியை உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும் 100 கிராம் வேக வைக்காத முள்ளங்கியில் வெறும் 16 கலோரிகள் தான் உள்ளது. எனவே எடையைக் குறைப்போருக்கு இது ஒரு சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *