ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா டூபிளசிஸ்? – Dinaseithigal

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா டூபிளசிஸ்?

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ந் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.  இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் பலர் விலகியுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டூபிளசிஸ் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெஸ்ட் இண்டீஸில்  நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் லூசியா அணியை வழிநடத்தி வரும் டூபிளசிஸ், இந்த தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னதாக காயமடைந்தார். இதனால்  அவர் ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் டூபிளசிஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *