பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்பட காரணம் என்ன? – Dinaseithigal

பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்பட காரணம் என்ன?

* பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய அதிகம் மூளையை உபயோகிக்கின்றனர். அநேகமாக இவ்வாறு பகல் பொழுதில் அவர்கள் வேலை செய்வதால் இரவில் அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டியது அவசியமாகின்றது.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான அளவு தூக்கம் இருப்பதில்லை. இது அவர்களுக்கு குறைந்த சக்தியினை அளித்து விடுகின்றது. இக்காலங்களில் இவர்கள் பகலில் 20-30 நிமிடங்கள் வரை (ழிணீஜீ) எனப்படும் ஓய்வினை எடுக்க வேண்டும்.

* மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக அதிக மறதி அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவேதான் முந்தைய காலங்களில் இக்காலங்களில் அவர்களை வீட்டு வேலைகள் செய்ய விடாமல் ஓய்வு கொடுத்திருந்திருக்கலாம்.

* ஆபீஸ், குடும்பம் என விடாது வேலை செய்வது அவர்களை மிகவும் சோர்வானவர்கள் ஆக்கி விடுகின்றதாம். எனவே அவர்களுக்கு கூடுதல் ஓய்வும், தூக்கமும் தேவைப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *