வித்தியாசமான கெட்டப்பில் ஆரி – Dinaseithigal

வித்தியாசமான கெட்டப்பில் ஆரி

நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஆரி கடந்த பிக்பாஸ் சீசனில் சாம்பியன் பட்டம் வென்று மேலும் பிரபலமடைந்தார். தற்போது இவர் பகவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை காளிங்கன் இயக்குகிறார். திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆரியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் நீண்ட தலைமுடி, தாடியுடன் இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.

அவரது தோற்றம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஆரி ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம் ஆகியோரும் உள்ளனர். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *