என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என பலர் தடுத்தனர் – நடிகர் சாந்தனு – Dinaseithigal

என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என பலர் தடுத்தனர் – நடிகர் சாந்தனு

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட மேலும் பலரும் இதில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சாந்தனு பேசும்போது, “என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று நிறைய பேர் தடுத்துள்ளனர். அதையும் மீறி தயாரிப்பாளர் ரவீந்தர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை ஆரம்பித்து, இப்போது முடித்தும் விட்டார். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம். அதை ஸ்ரீீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றி உள்ளார்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *