இறுதிவரை பெங்களூர் அணிக்காகவே ஆட வேண்டும் -யுஸ்வேந்திர சாஹல் – Dinaseithigal

இறுதிவரை பெங்களூர் அணிக்காகவே ஆட வேண்டும் -யுஸ்வேந்திர சாஹல்

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ந் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்றும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ அணியில் இடம்பெற்றுள்ள  இந்திய சுழற்பந்து வீச்சாளர் 31 வயதான யுஸ்வேந்திர சாஹல் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தற்போது எனது முழு கவனமும் ஐ.பி.எல். போட்டி மீது தான் இருக்கிறது. இலங்கை தொடரில் சிறப்பான பார்மில் இருந்தேன். அதனை ஐ.பி.எல். தொடரிலும் தொடருவேன் என்று நம்புகிறேன். நான் ஓய்வு பெறும் வரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவே விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எப்போதெல்லாம் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறேனோ? அது பெங்களூரு அணிக்காகவே இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும்.

கேப்டன் விராட்கோலி வித்தியாசமானவர். அவர் மெத்தனமாக செயல்படுவதை விரும்பமாட்டார். எப்போதும் களத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடியவர். இது மேக்ஸ்வெல்லுக்கும் தெரியும். இதனால் இங்கு துளி கூட மெத்தனம் காட்ட வாய்ப்பு கிடையாது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *