மாநில நீச்சல் போட்டி சென்னையில் தொடங்கும் என அறிவிப்பு – Dinaseithigal

மாநில நீச்சல் போட்டி சென்னையில் தொடங்கும் என அறிவிப்பு

37-வது சப்-ஜூனியர் மற்றும் 47-வது ஜூனியர் பிரிவினருக்கான மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) நீச்சல் வளாகத்தில் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டி அக்டோபர் 1-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் வெற்றி பெறுபவர்கள் பெங்களூருவில் (அக்டோபர் 19-23) நடைபெறும் தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் 75-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி இதே வளாகத்தில் அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *