September 15, 2021 – Dinaseithigal

இரண்டாம் உலகப்போர் முக்கிய நிகழ்வுகள் செப்டம்பர் 15

1916 – முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன. 1935 – செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது. 1935 – நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது. 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையில் பெரும் எண்ணிக்கையான லூப்டுவாபே வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை வானூர்தி தாங்கிக் கப்பல் வாசுப் சப்பானியர்களினால் மூழ்கடிக்கப்பட்டது. 1944 – இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலப்பாட்டை எடுப்பதற்காக பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.

Read More

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனை சுட்டுக்கொல்ல வேண்டும் -தெலுங்கானா அமைச்சர்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 6 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான குற்றவாளி பல்லகொண்ட ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தெலுங்கானா அமைச்சர் சாமகுரா மல்லா ரெட்டி கூறியதாவது:-‘பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எங்கள் ஆறுதலை தெரிவிக்கிறோம். குற்றவாளியை நிச்சயம் பிடித்து என்கவுண்டர் செய்வோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதுடன், தேவையான உதவியை செய்ய உள்ளோம்’ என்றார்.

Read More

இந்தியாவில் புதிதாக 27,176 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 27,176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 33 லட்சத்து 16 ஆயிரத்து 755 ஆக உயர்ந்தது. கேரளாவை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கேரளாவிலும் பாதிப்பு சரியத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அங்கு புதிதாக 1,185 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சில நாட்களுக்கு முன்பு வரை தினசரி …

Read More

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். கோவிலில் பூஜைகள் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்தநாட்களில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். …

Read More

சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய பிரதேசத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை 5:30 மணியளவில் வடகிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Read More

பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி.யா?- கவுன்சில் கூட்டத்தில் பரிசீலனை

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வரும் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற உள்ளது. 20 மாதங்களுக்கு பிறகு இந்த கூட்டம் முதன் முதலாக காணொலி காட்சி வழியாக இன்றி நேரடியாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி. வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அப்படி இவற்றை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வந்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். தங்கள் வருமானத்துக்கு இழப்பு …

Read More

திருமணம் நிச்சயக்கப்பட்ட மணப்பெண் மாயம் – போலீசார் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் வனிதா (வயது 38). இவரது மகள் ஷோபனா (19) பிளஸ்-2 முடித்துள்ள இவர் தனது தாயுடன் பட்டாசு கம்பெனி வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சந்தை முருகன் என்பவருக்கும் ஷோபனாவுக்கு காதல் ஏற்பட்டது. இது தெரிய வந்ததும் குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் மதுரையை சேர்ந்த சரவணன் என்பவருடன் ஷோபனாவுக்கு கடந்த 29-ம் தேதி திருமணம் நிச்சயமானது. இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற ஷோபனா பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை …

Read More

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை – இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி: இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டு மாணவர்கள் இறப்பு நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை மேலும் தீவிரபடுத்தியுள்ளது. தமிழக அரசு நீட்டிற்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக அரசை போன்று சட்டம் நிறைவேற்றுவதோடு மட்டும் இல்லாமல் வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசும் மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மன உறுதிக்கான வகுப்புகளை எடுக்க வேண்டும். இது அரசின் தவறான முறையற்ற தேர்வு நடவடிக்கை என்ற வகையில் …

Read More

தேனி அருகே தொழிலாளி பலி – போலீசார் விசாரணை

தேனி அருகே கம்பம் அண்ணாபுரத்தை சேர்ந்தவர் ராசு (80). இவர் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். ஊத்துக்காடு சாலையில் உள்ள தோப்பில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள நிழற்குடையில் அவர் இறந்து கிடந்தார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

தேனி அருகே நோய் கொடுமையால் பெண் தற்கொலை

தேனி: தேனி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மனைவி செவ்வந்தி (வயது51). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செவ்வந்திக்கு முதுகுதண்டுவட பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தார். சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அவரை தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More