இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – Dinaseithigal

இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் 12 வயதில் இருந்து 17 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் ‘சைகோ வி-டி’ என்ற புதிய மருந்தை உருவாக்கி உள்ளது. இதை குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த மருந்தின் சோதனை வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் மத்திய அரசுக்கு அது சப்ளை செய்யப்படும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இருக்கிறார்கள்.

முதலாவதாக இணை நோய் உள்ள குழந்தைகளுக்கே முதலில் ஊசி போடப்பட இருக்கிறது. அதாவது இதய நோய், உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய் உள்ள குழந்தைகளுக்கு முதலில் ஊசி போடப்படும். அந்த வகையில் நாடு முழுவதும் 20 முதல் 30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு 3 மாதத்தில் ஊசி போட்டு முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் மற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கூறி உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *