மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடிய வியாபாரி – Dinaseithigal

மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடிய வியாபாரி

போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலை சேர்ந்த இந்த வியாபாரியின் பெயர் அஞ்சல் குப்தா (வயது 28). இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் அஞ்சல் குப்தா பானிபூரியை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினார். சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானிபூரிகளை அவர் கொடுத்தார். பலரும் அதை வாங்கி சாப்பிட்டு வாழ்த்திவிட்டு சென்றனர்.

இதுதொடர்பாக அஞ்சல் குப்தா கூறும்போது, ‘‘பிறக்கும் குழந்தைகளில் ஆண், பெண் என்று பேதம் பார்க்கக்கூடாது. இதை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். பெண் குழந்தை பிறந்ததை அறிந்த சில உறவினர்கள், ‘‘உனக்கு பொருளாதார சுமை ஏற்படும்’’ என்று கூறினார்கள். அதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பெண் குழந்தை பெற்ற அனைவருமே அதிர்ஷ்டசாலிகள்’’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *