திருப்பூர் எஸ்.பி., கார் கவிழ்ந்து விபத்து – Dinaseithigal

திருப்பூர் எஸ்.பி., கார் கவிழ்ந்து விபத்து

திருப்பூர்;

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டார் சசாங் சாய். நேற்று இவர் ஒரு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் ஆஜராவதற்காக சென்னை சென்றார். பின்னர் நேற்றிரவு திருப்பூருக்கு புறப்பட்டார். இன்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் செங்கப்பள்ளி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் எஸ்.பி., சசாங் சாய் மற்றும் டிரைவர் ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் எஸ்.பி., வீடு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *