இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம் தராத சூழலை உருவாக்கிடுவோம்- மு.க. ஸ்டாலின் – Dinaseithigal

இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம் தராத சூழலை உருவாக்கிடுவோம்- மு.க. ஸ்டாலின்

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் தனுஷ் தற்கொலை செய்த நிலையில் இப்போது அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி கனிமொழி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘#NEET உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக்கொள்கிறேன். சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *