திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது – Dinaseithigal

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது

திருவையாறு:

திருவையாறு பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியன் (23), வினோத் ராஜ் (30). இருவரும் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் கால்வாய் குழியிலிருந்து எதிர்கரையிலுள்ள அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு (43) சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி ஏற்றி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜே.சி.பி. எந்திரத்தையும் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து மரூர் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்று, குளஞ்சியப்பன், பாண்டியன் மற்றும் வினோத் ராஜ் ஆகிய மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *