சங்கரன்கோவில் அருகே விவசாயி அடித்துக்கொலை – போலீசார் விசாரணை – Dinaseithigal

சங்கரன்கோவில் அருகே விவசாயி அடித்துக்கொலை – போலீசார் விசாரணை

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சண்முகையா (வயது 60), விவசாயி. இவருக்கு மருதாத்தாள் என்ற மனைவியும், மனோகரன், சுதாகரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் பெரியதுரை (43). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை ஆயாள்பட்டி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சண்முகையா சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பெரியதுரை, சண்முகையாவை தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் சிறிது நேரத்தில் பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பெரியதுரை கட்டையால் சண்முகையாவை அடித்து கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *