மூக்கடைப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம் – Dinaseithigal

மூக்கடைப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்

சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது குறையும். ஆகாயத்தாமரை மற்றும் ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். மாவிலைகளை காய வைத்து பொடி செய்து, நெருப்பில் போட்டு அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.
சுக்கை ஒரு கப் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பால் ஊற்றி கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என குடித்து வந்தால், மூக்கடைப்பு வருவது தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *