பீர்க்கங்காய் நன்மைகள் – Dinaseithigal

பீர்க்கங்காய் நன்மைகள்

பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

சொறி,சிரங்கு,புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது தோல் நோய்,தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாகத் பயன்படுகிறது. கண்பார்வை நன்றாய் தெரியவும்,நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *