கொரோனா தொற்று அதிகரிப்பு : தனிமைபடுத்திக்கொண்ட ரஷ்ய அதிபர் – Dinaseithigal

கொரோனா தொற்று அதிகரிப்பு : தனிமைபடுத்திக்கொண்ட ரஷ்ய அதிபர்

உலகளவில் கொரோனாதொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில்,  ரஷ்யாவில் இதுவரை  71,76,085- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போதும் அந்நாட்டில் தினசரி பாதிப்பு ஏறத்தாழ 17 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது.  தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அந்நர்டு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ரஷ்யாவின் அதிபர் புதின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதினுடன் தொடர்பில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, புதின் சுய தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக புதினின் தஜிகிஸ்தான் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதின்  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *