மாசிக்காய் நன்மைகள் – Dinaseithigal

மாசிக்காய் நன்மைகள்

மாசிக்காயை தூளாக்கி பாலில் இட்டு பருகிவர அதிக மாதவிலக்கு கட்டுப்படும். வலியுடனான மாத விலக்கு சரியாகும். வெள்ளைபோக்கு அதிகமாகும்போது இடுப்பு வலி, வயிற்று வலி, சோர்வு ஏற்படும். இப்பிரச்னைகளை மாசிக்காய் சரிசெய்கிறது.
மாசிக்காயை பயன்படுத்தி மூலநோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வெண்ணெய், மாசிக்காய் பொடி.
செய்முறை: பசு வெண்ணெய்யுடன் மாசிக்காய் பொடி சேர்த்து கலந்து இரவு நேரங்களில் பூசிவர மூலநோய், ஆசனவாய் கடுப்பு, வாய்ப்புண் குணமாகும்.
இதை தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கு மேல்பூச்காக பயன்படுத்தலாம். மாசிக்காய் தோல் சுருக்கத்தை போக்கும் மருந்தாகி பயன்தருகிறது. மாசிக்காய் மிகுந்த துவர்ப்பு உடையது என்பதால் புண்களை ஆற்றும். ரத்தத்தை கட்டுப்படுத்தும். ஆசனவாய் வெடிப்பை குணப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *