பூசணிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி? – Dinaseithigal

பூசணிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் – ஒரு கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மோர் – ஒரு கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் துருவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
கடுகு – அரை தேக்கரண்டி
பெருங்காய தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை

பூசணிக்காயை தோலை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, வேகவைத்த பூசணிக்காய் துண்டுகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். அதனுடன் கரைத்த மோரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *