வடிவேலு படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் – Dinaseithigal

வடிவேலு படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடிகர் வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில, தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க உள்ளார்.  லைகா நிறுவனம்  தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தில் வடிவேலு 2 பாடல்கள் பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *