க்ளாப் டீசரை பாராட்டிய அமிதாப்பச்சன் – Dinaseithigal

க்ளாப் டீசரை பாராட்டிய அமிதாப்பச்சன்

மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகான நடித்தார். தற்போது வில்லனாக நடித்து வரும் இவர் சில ஆண்டுகளுக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள படம்  கிளாப் இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆதிக்கு ஜோடியாக, ஆகான்ஷா சிங் நடித்துள்ளார்.

மேலும் கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்தி  சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியதோடு, பெரும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மேலும் நடிகை ஆகான்ஷாவின் திறமையான நடிப்பையும் அவர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *