புதின படகில் செருப்புடன் புகைப்படம் : பிரபல மலையாள நடிகை கைது – Dinaseithigal

புதின படகில் செருப்புடன் புகைப்படம் : பிரபல மலையாள நடிகை கைது

பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அரன்முலா கோவிலுக்கு சொந்தமான, பாம்பு போன்ற நீண்ட வடிவில் இருக்கும் படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது காலில் அவர் செருப்பும் அணிந்து இருந்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து கேரள தேவஸ்தானம் சார்பில், நிமிஷா மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவா்,  இந்த படகு புனிதமானது என்று எனக்கு தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. தெரியாமல் இந்த தவறை செய்து விட்டேன்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *