கால் நூற்றாண்டுக்கு பிறகு மலையாளத்தில் என்ட்ரி ஆகும் அரவிந்த சாமி – Dinaseithigal

கால் நூற்றாண்டுக்கு பிறகு மலையாளத்தில் என்ட்ரி ஆகும் அரவிந்த சாமி

தளபதி படத்தில் ரஜினிக்கு தம்பியாக அறிமுகமானவர் நடிகர் அரவிந்த சாமி.  தொடர்ந்து ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவ இவர், பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமானார். கடந்த 2006-ம் ஆண்டு சாசனம் படத்தில் நடித்த இவர், 7 வருட இடைவெளிக்கு பிறகு கடல் படத்தின் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதன்பிறகு தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தற்போது ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி, புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஒட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அரவிந்த் சாமி நடிப்பதால் இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாக்குகின்றனர். தமிழில் இப்படத்திற்கு ‘ரெண்டகம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

அரவிந்த் சாமி கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘தேவராகம்’ எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் சாமி, நேரடி மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *