சூரி வீட்டு திருமண விழாவில் திருடிய கொள்ளையன் கைது – Dinaseithigal

சூரி வீட்டு திருமண விழாவில் திருடிய கொள்ளையன் கைது

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி  இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சூரி முன் நின்று நடத்திய இந்த திருமணத்தில், 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தற்போது காணாமல் போன 10 சவரன் நகையை மீட்டுள்ளதோடு, விக்னேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *