இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீஸ்ட் – Dinaseithigal

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீஸ்ட்

விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். சன்பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு டப்பிங், இசை கோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர். பொங்கலுக்கு பீஸ்ட் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *