September 14, 2021 – Dinaseithigal

இரண்டாம் உலகப் போர் முக்கிய நிகழ்வுகள் செப்டம்பர் 14

1917 – உருசியப் பேரரசு அதிகாரபூர்வமாகக் உருசியக் குடியரசானது. 1940 – அங்கேரிய இராணுவம் உள்ளூர் அங்கேரியர்களின் உதவியுடன் வடக்கு  டிரான்சில்வேனியாவில் 158 உருமேனியர்களைப் படுகொலை செய்தனர். 1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் படைகள் கிரேக்கத்தின் பல கிராமங்களில் புகுந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் படுகொலைகளில் ஈடுபட்டனர். 500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1944 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நகரம் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டது. 1948 – போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது. 1954 – சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

Read More

கோத் படுகொலைகள் முக்கிய நிகழ்வு – செப்டம்பர் 14

1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின்  படைகள் மாஸ்கோவினுள் நுழைந்தன.  உருசியப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது. 1829 – உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது. 1846 – கோத் படுகொலைகள்: ஜங் பகதூர் ராணாவும் அவனது சகோதரர்களும் நேப்பாளத்தின்  பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர். 1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலைமுயற்சியில் காயமடைந்து இறந்தார். தியொடோர் ரோசவெல்ட் புதிய அரசுத்தலைவரானார். 1914 – ஆத்திரேலியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஏஈ1 பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரித்தானியாவில் மூழ்கியது.

Read More

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாககப்பட்ட நாள்

1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே. 1960 – அமெரிக்க சிஐஏயின் உதவியுடன், சயீரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மொபுட்டு செசெ செக்கோ ஆட்சியைக் கைப்பற்றினார். 1960 – எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது. 1979 – அஃபிசுல்லா அமீனின் கட்டளைப்படி ஆப்கானித்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார். 1982 – லெபனானின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார். 1984 – ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற சாதனை படைத்தார்.

Read More

ராஜஸ்தானில் நீட் தேர்வில் முறைகேடு – 8 பேர் கைது

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தின் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர். அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க அதனை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங், தினேஷ்வரி …

Read More

குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை உருவாகி விடக்கூடாது என்பதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டு வருகின்றன. இந்த நிலையில் குஜராத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பை தடுக்க வதோதரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் போன்ற முக்கிய நகரங்களில் நாளை முதல் செப்டம்பர் 25-ந்தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Read More

பவானிபூர் இடைத்தேர்தல் வேட்புமனுவை தாக்கல் – தேர்தல் கமிஷனில் மம்தா மீது பா.ஜனதா புகார்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இதனால் பவானிபூர் இடைதேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பிரியங்கா களம் இறங்குகிறார். மம்தா பானர்ஜி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த தகவலை வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை என தேர்தல் கமிஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது.

Read More

இந்தியாவில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை- உலக சுகாதார மையம் பாராட்டு

புதுடெல்லி: உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால் கூறியதாவது:- கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பிறகு அதை செலுத்திக் கொள்வதில் மக்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நாடு முழுவதும் 10 கோடி டோஸ் போடுவதற்கே 85 நாட்கள் ஆகி இருக்கிறது. இந்தநிலை தற்போது மாறி 13 நாட்களில் 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு இந்தியா புதிய சாதனை படைத்துளளது. இதன் மூலம் 65 கோடியாக இருந்த எண்ணிக்கை தற்போது 75 கோடியை தாண்டி டோஸ் செலுத்தப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.

Read More

இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் 12 வயதில் இருந்து 17 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் ‘சைகோ வி-டி’ என்ற புதிய மருந்தை உருவாக்கி உள்ளது. இதை குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த மருந்தின் சோதனை வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் மத்திய அரசுக்கு அது சப்ளை செய்யப்படும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இருக்கிறார்கள். முதலாவதாக இணை நோய் உள்ள குழந்தைகளுக்கே …

Read More

கங்கான் பகுதியில் 36 ஆண்டுகளாக மரங்கள் நட்டு பராமரிக்கும் ஆசிரியர்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பர்கார் மாவட்டம், கங்கான் பகுதியை சேர்ந்தவர் ரமா மாஸ்திரி (வயது 77). ஓய்வு பெற்ற ஆசிரியர். இயற்கையை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது சொந்த கிராமத்தை இணைக்கும் 3 சாலைகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்த பணிகளை அவர் 36 ஆண்டுகளாக செய்து வருகிறார். இப்போது 3 சாலைகளும் சோலைகளாக காட்சி அளிக்கின்றன. தொடர்ந்து புதிது புதிதாக மரங்களை நட்டு வருகிறார்.

Read More

திருப்பதியில் வெளியூர் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு

திருப்பதியில் கடந்த வாரம் முதல் உள்ளூர் பக்தர்கள் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் வெளியூர் பக்தர்கள் தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இலவச வாய்ப்பு இல்லாத காரணத்தால் வேண்டுதல்களை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கின்றோம் என்று சாதாரண பக்தர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை கவனித்த திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை போல் இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் பக்தர்களுக்கு வெளியிட முடிவு செய்து அதற்கான …

Read More